“பிச்சைக்காரன்னு கூப்பிட்டாங்க..” ஊரே கிண்டல் செய்த யூடியூபர் இன்று உலக ஃபேமஸ்…! எல்லாத்துக்கும் காரணம் பிரபல பாடகர் தானாம்..!!

By Devi Ramu on தை 6, 2026

Spread the love

மீரட்டைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ஷாதாப் ஜகாதி, இன்று புகழின் உச்சியில் இருந்தாலும் அவரது கடந்த காலம் மிகுந்த வலிகள் நிறைந்தது. தொடக்கத்தில் சவுதி அரேபியாவில் டிரைவராக வேலை செய்த அவர், அங்குள்ள இந்தியர்களுக்கு மொழிப் பிரச்சனையால் ஏற்படும் சிரமங்களைக் கண்டு, அதைத் தீர்க்க வேடிக்கையான வீடியோக்களைப் பதிவிடத் தொடங்கினார். சொந்த ஊர் திரும்பியபோது அவரது வீடியோக்கள் சரியாக ஓடவில்லை. சொந்தக் குழந்தைகளே அவரை “பிச்சைக்காரன்” என்று கிண்டல் செய்து குடும்பத்தினரின் ஆதரவும் கிடைக்காத நிலையில், வறுமையும் அவமானமுமே அவருக்கு மிஞ்சியது.

மனம் தளராமல் அவர் பதிவிட்ட “10 ரூபாய் பிஸ்கட் எவ்வளவு?” என்ற ஒற்றை வசன வீடியோ, அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. பிரபல பாடகர் பாட்ஷா அந்த ரீல்சை பாராட்டி வீடியோ உருவாக்கியதால், ஷாதாப் உலகப்புகழ் பெற்றார். தற்போது பல பெரிய நிறுவனங்கள் அவருக்கு விளம்பர வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. அதே சமயம், சில தேவையற்ற புகார்கள் மற்றும் சர்ச்சைகளால் அவர் மன உளைச்சலுக்கு ஆளாகி, தற்போது தனது சொந்த ஊரான மீரட்டை விட்டே வெளியேற முடிவெடுத்துள்ளது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.