“எப்படி வந்து சிக்கிருக்கேன் பாத்தியா?”… கலகலப்பு பட பாணியில் Exhaust Fan துளையில் சிக்கிய திருடன்… சிரிப்பலையை ஏற்படுத்தும் வீடியோ…!

By Nanthini on தை 6, 2026

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேர்ந்த சுபாஷ் குமார் ராவத் என்ற நபர் தன்னுடைய மனைவியுடன் கோவிலுக்கு சென்று வீட்டுக்கு திரும்பி உள்ளார். அப்போது அவருடைய வீட்டின் Exhaust வழியாக ஒருவர் சிக்கிக் கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே பயத்தில் கத்திய அவர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருடனை மீட்டு கைது செய்தனர். தனது கூட்டாளிகள் தன்னை தவிக்க விட்டு தப்பி ஓடியதாக கைதான திருடன் போலீசில் தெரிவித்துள்ளான். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு பட காட்சியை இந்த சம்பவம் ஞாபகப்படுத்துவதாக நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.