பெற்றோர்கள் கவனத்திற்கு… பள்ளிகளில் நடக்கப்போகும் மிக முக்கிய மாற்றம்… தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு…!!

By Soundarya on தை 6, 2026

Spread the love

தமிழகத்தில் மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ள புதிய பாடத்திட்ட வரைவு இன்று  இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சூழ்நிலையியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கான இந்தப் புதிய பாடத்திட்டங்கள் குறித்துக் கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது கருத்துகளையும் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பாடத்திட்டத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தாலோ அல்லது மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று கருதினாலோ, பொதுமக்கள் tnschools.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாகத் தங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம். மக்களின் கருத்துகளைப் பரிசீலித்த பின்னரே இந்தப் பாடத்திட்டங்கள் இறுதி செய்யப்பட்டு, அடுத்தடுத்த கல்வி ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன. இது கல்வி முறையில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் ஒரு முக்கிய முயற்சியாகப் பார்க்கப்படுகிறது