பெண் ஒருவர் தனது தாயை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட வருகிறார். அப்போது அங்கே இருந் ஒருவர் அப்பெண்ணிடம் ஏதோ ஒன்று கேட்கேட்கிறார். அந்த நேரத்தில் அந்த தாய் உடைந்து அழுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்கள் பிள்ளைகளின் கல்விக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பெற்றோர்கள் தங்கள் அமைதியான கிராமத்து வாழ்க்கையைத் துறந்து நகரங்களுக்குக் குடிபெயர்கிறார்கள். ஆனால், அதே பிள்ளைகள் வளர்ந்து ஆளான பிறகு, இடப்பற்றாக்குறையைக் காரணம் காட்டித் தங்கள் பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது மிகுந்த மனவேதனைக்குரிய செயலாகும். இது போன்ற சூழல்கள் பெற்றோர்களின் தியாகத்தை மறந்துவிடும் மனப்பான்மையையே காட்டுகின்றன.
A daughter is taking her mother to an old-age home, saying there is no place for her at home.
If one wishes to spend old age with dignity and peace, it is not the city but the village that should be chosen. Educate children and help them find jobs from there itself.
Parents… pic.twitter.com/iEmlfItgyN
— Oxomiya Jiyori 🇮🇳 (@SouleFacts) January 5, 2026
எனவே, முதுமைக் காலத்தைக் கண்ணியத்துடனும் நிம்மதியுடனும் கழிக்க விரும்புவோர் நகரங்களை விட கிராமங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். கிராமப்புறச் சூழலில் இருந்தபடியே பிள்ளைகளின் வளர்ச்சிக்குத் தேவையான உதவிகளைச் செய்துவிட்டு, சொந்த மண்ணிலேயே சுயமரியாதையுடன் வாழ்வதுதான் ஒருவருக்கு அமைதியான அந்திமக் காலத்தை உறுதி செய்யும். பிள்ளைகளுக்காக வேர்களை அறுத்துக் கொள்வதை விட, கிராமத்து வாழ்வைப் பாதுகாப்பதே சிறந்தது.
