BREAKING: புயல் சின்னம்.. தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கும்…!!

By Soundarya on தை 6, 2026

Spread the love
தெற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம்  தகவல் வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, ஜனவரி 9 மற்றும் ஜனவரி 10 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த வானிலை மாற்றத்தால், ஜனவரி 9 ஆம் தேதி மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களிலும், ஜனவரி 10 ஆம் தேதி விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மீனவர்கள் மற்றும் கடலோர மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.