உங்க அலப்பறை தாங்க முடியல…! தம்பி சமாதியில் அரிவாளால் கேக் வெட்டிய அண்ணன்…! தட்டி தூக்கிய போலீஸ்…!!

By Devi Ramu on தை 5, 2026

Spread the love

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே, மறைந்த தனது தம்பியின் பிறந்தநாளை முன்னிட்டு ஐயப்பன் என்பவர் செய்த விபரீத செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தனது தம்பி ராஜ்குமாரின் சமாதிக்குச் சென்ற ஐயப்பன், அங்கு கேக் வைத்து பெரிய வீச்சரிவாளால் அதனை வெட்டி கொண்டாடியுள்ளார். ராஜ்குமார் ஏற்கனவே பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும், ஐயப்பனும் ஒரு ரவுடியிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அரிவாளால் கேக் வெட்டிய இந்த வீடியோ இணையத்தில் பரவி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். சுங்குவார்சத்திரம் போலீசார் ஐயப்பனைக் கைது செய்ததோடு, அவர் மறைத்து வைத்திருந்த பயங்கர ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். தம்பியின் பாசத்திற்காகச் செய்தாலும், சட்டத்திற்குப் புறம்பாக ஆயுதங்களைக் காட்டி மிரட்டல் விடுத்ததற்காக அவர் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.