“மதுரோவை விட பெரிய விலையை கொடுக்க வேண்டி வரும்…” டிரம்ப் கொடுத்த வார்னிங்…. உலகத்தையே உலுக்கும் வெனிசுலா விவகாரம்…!!

By Devi Ramu on தை 5, 2026

Spread the love

வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்த கையோடு, அந்த நாட்டின் இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்காவின் கட்டளைகளுக்குப் பணிய மறுத்தால், மதுரோவை விட மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் மிரட்டியுள்ளார்.

வெனிசுலா எல்லை அருகே ஏற்கனவே 15,000 அமெரிக்கப் போர் வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தேவைப்பட்டால் புதிய ராணுவத் தாக்குதல் நடத்தவும் தயங்க மாட்டோம் என டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

   

அமெரிக்காவின் இந்த அத்துமீறிய நடவடிக்கைக்கு வெனிசுலா தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கைது செய்யப்பட்ட மதுரோ மற்றும் அவரது மனைவியை விடுவிக்கக் கோரியும், அமெரிக்காவின் ஆதிக்கத்தை முறியடிக்கவும் இடைக்கால அதிபர் தலைமையில் மக்கள் ஒன்றிணைந்து போராடுவோம் என அந்நாடு தெரிவித்துள்ளது.

   

மதுரோவின் மகன் தனது தந்தை விரைவில் நாடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்ட நாட்டைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர டிரம்ப் துடிப்பது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.