BREAKING: மகளை கர்ப்பமாக்கிய தந்தைக்கு தூக்குத்தண்டனை… பரபரப்பு தீர்ப்பு…!!

By Soundarya on தை 5, 2026

Spread the love

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில், 2024-ஆம் ஆண்டு தனது 15 வயது மகளைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தைக்கு, வள்ளியூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்குப் பிறந்த குழந்தையின் டிஎன்ஏ (DNA) பரிசோதனை முடிவுகள், தந்தைதான் குற்றவாளி என்பதை அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தின. இந்த வலுவான ஆதாரங்களின் அடிப்படையில், இழைக்கப்பட்ட குற்றம் மிகக் கொடூரமானது எனக் கருதி நீதிமன்றம் இந்த உச்சகட்டத் தண்டனையை வழங்கியுள்ளது.