FLASH NEWS: செங்கோட்டையனை தொடர்ந்து அதிமுகவில் அடுத்த நீக்கம்… சற்றுமுன் இபிஎஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

By Nanthini on தை 5, 2026

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அதிமுகவில் இபிஎஸ்-க்கு எதிராக குரல் கொடுப்பவர்கள் அனைவரும் அடுத்தடுத்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் கூட செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் தமிழக வெற்றி கழகம் கட்சியில் ஐக்கியமானார்.

இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக அதிமுகவில் அடுத்தடுத்து பதவி பறிப்பு, நீக்கம் தொடர்பான அறிவிப்புகள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அதன்படி இன்று திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ பாஸ்கர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளீட்டு அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழக வெற்றிக்கழகம் கட்சி இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது