“என் புருஷனை கொன்னுட்டு நம்ம ஜாலியா இருக்கலாம்”… இரவோடு இரவாக கள்ளக்காதலுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்… வெளிச்சத்திற்கு வந்த உண்மை…!

By Nanthini on தை 5, 2026

Spread the love

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த நாராயணா (35) என்பவர் ஒடிசாவை சேர்ந்தவர். இவர் அதே பகுதியை சேர்ந்த 27 வயதுடைய பந்தித்தா என்ற பெண்ணை கடந்த எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் சேர்ந்து பிர்பேட்டில் குடியேறியுள்ளனர் . நாராயணா பிளமிங் வேலை செய்து வந்த நிலையில் அவருடைய மனைவி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த தம்பதிக்கு ஆறு வயதில் ஒரு குழந்தையும் உள்ள நிலையில் பந்திதாவிற்கு மீட்டருகே வசிக்கும் 25 வயது உடைய வித்யாசாகர் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் தனிமையில் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதனை அறிந்த நாராயணா தனது மனைவியை கண்டித்து குழந்தையின் எதிர்காலத்தை நினைத்து சேர்ந்து வாழ்வோம் என்று கூறியுள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் பந்திதா தனது காதலனுக்கு போன் செய்து என்னை ரொம்ப டார்ச்சர் பண்ற என் புருஷனை கொன்னுட்டு நாம் சேர்ந்து வாழலாம் என வித்தியாசாகர் உடன் சேர்ந்து திட்டம் தீட்டியுள்ளார்.

   

அதன்படி கடந்த ஜனவரி 1ஆம் தேதி இரவு வேலை முடிந்து குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த நாராயணாவை இருவரும் சேர்ந்து இரும்பு கம்பியால் சரமாரியாக அடித்து கொலை செய்தனர். பிறகு ஸ்டேஷனுக்கு போன் செய்த பந்தித்தா வீட்டிற்கு திருட வந்தவர்கள் கணவனை அடித்து கொலை செய்து விட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நாராயணா மனைவியிடம் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் கைது செய்து விசாரணை நடத்திய போது கணவனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து அவரையும் அவருடைய கள்ளக்காதலனையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.