கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வளையாம்பட்டு கிராமத்து சேர்ந்தவர் ராஜா. தொழிலாளி ஆன இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த 12 வருடத்திற்கு முன்பு திருமணமாகியது. கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ராஜா தற்கொலை செய்து கொண்டார். தனிமையில் வசித்து வந்த நந்தினி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலமோன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது சாலமோன் தாய் கிறிஸ்தோப்மேரிக்கு பிடிக்காததால் அடிக்கடி மாமியார் மருமகளுக்கு தகராறு ஏற்பட்டு கொண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி மாமியார் கிறிஸ்தோப்மேரி குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க கோவிலில் மாந்திரீகம் செய்வதாக கூறி நந்தினியை அழைத்து சென்று கழுத்தை அறுத்து கொலை செய்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செய்த போலீசார் கிறிஸ்தோப்மேரி மற்றும் அவருடைய தோழி எமிலி ஆகிய இரண்டு பேரை கைது செய்தார்கள்.
இதனை அடுத்து கிறிஸ்தோப்மேரிபோலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், நானும் என்னுடைய மகனும் ஊரில் நல்ல வசதியோடு மரியாதையோடு வாழ்ந்து வந்தோம். ஆனால் என்னுடைய மகனை இரண்டாவது திருமணம் செய்து எங்கள் குடும்பத்தை சீர்குலைத்த நந்தினி கொலை செய்து விட வேண்டும் என்று திட்டம் தீட்டினேன். பிறகு எனது மகனுக்கு வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்கலாம் என்று நினைத்தேன். பல மாதமாக நந்தினி கொலை செய்வதற்காக காத்திருந்தேன். இதுகுறித்து எனது தோழி எமிலியிடம் சொன்னேன். அவள் உனது மருமகள் நந்தினி இடம் நைசாக பேசி மாந்திரீகம் செய்யவேண்டும் என்று கூறி அழைத்து வா என்றும் அங்கு வைத்து கொலை செய்து விடலாம் என்றும் கூறினார்.
அதன்படி அதிகாலையில் நந்தினியை அழைத்துக் கொண்டு நானும் என்னுடைய தோழியும் சங்கராபுரம் அருகே உள்ள சோளம் பட்டு மணிமுக்தாறின் கரையோரம் சென்றோம் அங்கே பூஜை செய்யும் போது கண்ணை மூடிக்கொள் என்று கூறி நந்தினியின் கையில் ஒரு எலுமிச்சம் பழத்தை கொடுத்தேன். அந்த சமயத்தில் பின் பக்கமாக மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நந்தினி தலையை பிடித்து இழுத்து அவருடைய கழுத்தை அறுத்து துண்டித்தேன். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் உயிர் இழந்தார். உடலை தனியாகவும், தலையை தனியாகவும் ஆற்றங்கரையில் புதைத்து விட்டு எதுவும் நடக்காதது போல வீட்டிற்கு சென்று விட்டோம். எனது மகன் போலீஸ் புகார் கொடுத்ததால் சிக்கிக்கொண்டோம் என்று கூறியுள்ளார்.
