BREAKING: நாளை பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய அதிரடி உத்தரவு….!

By Nanthini on தை 4, 2026

Spread the love

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கிய நிலையில் டிசம்பர் 23ஆம் தேதி வரை தொடர்ந்து தேர்வுகள் நடந்தது. இதனை தொடர்ந்து டிசம்பர் 24 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 4 வரை தொடர்ந்து 12 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் விடுமுறை முடிவடைந்து நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கூடாது என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. பள்ளி வளாகத்தில் உள்ள மின் இணைப்புகளில் மின்கசிவு உள்ளதா, பள்ளி கட்டடங்கள் மழையால் பலவீனமாகி உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீர்த்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து தரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.