2026 மார்ச் மாதத்திற்குள் ஏடிஎம்களில் இருந்து 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படாது என சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல் முற்றிலும் வதந்தி என மத்தியஅரசின் பத்திரிகை பணியகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் தகவல் உண்மைக்கு மாறானது என்றும், ரிசர்வ் வங்கி (RBI) இதுபோன்ற எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
500 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும் என்றும், அவை முழுமையாகச் செல்லுபடியாகும் என்றும் பிஐபி ஃபேக்ட் செக் (PIB Fact Check) மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்தகைய ஆதாரமற்ற போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் என்றும், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் கவனத்தில் கொள்ளுமாறும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
