போடு ரகிட ரகிட..! அதிமுகவில் மொத்தமாக இணைந்தனர்… செம குஷியில் எடப்பாடி பழனிச்சாமி..!!

By Soundarya on தை 4, 2026

Spread the love

2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் பலத்தைப் பெருக்கிக் கொள்ளும் வகையில் மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை கிழக்கு மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியத்தில் உள்ள ஆங்குணம் ஊராட்சியைச் சேர்ந்த தி.மு.க மற்றும் அ.ம.மு.க நிர்வாகிகள் திரளாக அக்கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட கழக செயலாளர் எஸ். ராமச்சந்திரன் முன்னிலையில் இந்த இணைவு விழா நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளைக் கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இளங்கோ செய்திருந்தார். தேர்தலுக்கு முன்னதாகக் கிராமப்புறங்களில் நிலவும் இத்தகைய கட்சித் தாவல்கள், வரும் 2026 தேர்தலில் அப்பகுதியில் அ.தி.மு.க-வின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.