“என் பொண்டாட்டி உயிரோட இருக்கக்கூடாது”… 15 நாட்கள் துப்பாக்கி பயிற்சி எடுத்து கணவன் செய்த கொடூரம்… பட்டப் பகலில் நடந்த பயங்கரம்…!

By Nanthini on தை 4, 2026

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு சோலூர் பாலையா பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவர் பெங்களூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி புவனேஸ்வரி என்ற மனைவி உள்ள நிலையில் வங்கி ஒன்றில் உதவி மேலாளராக அவர் பணியாற்றி வந்தார். கணவன் மனைவி இருவருமே தமிழ்நாடு சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

பாலமுருகன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் கடந்த ஒரு வருடமாக புவனேஸ்வரி கணவரை பிரிந்து பெங்களூரு ராஜாஜி நகரில் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். கணவனிடமிருந்து விவாகரத்து கேட்டும் அவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனிடையே கடந்த டிசம்பர் 24ஆம் தேதி வெஸ்ட் ஆப் கார்டு ரோட்டில் புவனேஸ்வரி நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த பாலமுருகன் துப்பாக்கியால் மனைவியை சுட்டு கொலை செய்தார்.

   

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் வெளிவந்தது. அதாவது பாலமுருகன் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதனால் கணவனை விட்டு பிரிந்து சென்ற புவனேஸ்வரி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற பாலமுருகன் மனைவியை தீர்த்த கட்ட முடிவு செய்தார்.

   

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ய அவர் முடிவு செய்த நிலையில் துப்பாக்கிகளை வாங்க அவர் மூன்று முறை பீகார் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் 15 நாட்கள் அவர் பீகார் மாநிலத்திலேயே தங்கி இருந்து துப்பாக்கியை எப்படி கையாளுவது என பயிற்சியும் எடுத்துள்ளார். அதன் பிறகு மனைவியை சுட்டு கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.