திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்துள்ள பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருடைய மகன் டேனி வளனரசு (19). இவர் வேலூரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். வேலூர் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டின் மூன்றாவது மாடியில் வாடகைக்கு தங்கி கல்லூரியில் படித்து வந்தார். அதே வீட்டில் ஆறடி இந்திராநகர் பகுதியை சேர்ந்த கிஷோர் கண்ணன் (19), புதுச்சேரியை சேர்ந்த பார்த்தசாரதி (19), தர்மபுரியை சேர்ந்த 18 வயது இளைஞர் ஆகியோர் தங்கி இருந்தனர்.
இதனிடையே கடந்த 25 ஆம் தேதி தர்மபுரியை சேர்ந்த இளைஞர் தன்னுடைய சொந்த ஊருக்கு சென்ற நிலையில் அவரை தொடர்ந்து டேனி வளனரசு, கிஷோர் கண்ணன் ஆகியோர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளன. அதன் பிறகு கடந்த ஜனவரி 1 ஆம் தேதி மீண்டும் வேலூருக்கு திரும்பினர். அன்று இரவு நண்பர்களிடையே ஏற்பட்ட தகராறில் டேனி வளநரசுவை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவருடைய உடலை பார்த்தசாரதி மற்றும் கிஷோர் கண்ணன் ஆகியோர் பைக்கில் எடுத்துச் சென்று ஆந்திர மாநில எல்லையில் இருக்கும் பகுதியில் வீசிவிட்டு தப்பி சென்று விட்டனர்.
இதனிடையே மகனை பெற்றோர் செல்போனில் தொடர்பு கொண்ட போது முடியாததால் மகனை கண்டுபிடித்து தருமாறு போலீசில் பெற்றோர் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் வாலிபரை தேடி வந்த நிலையில் கிஷோர் கண்ணனை போலீசார் படித்த விசாரித்த போது பார்த்தசாரதி டேனி வளநரசுவை கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய பார்த்தசாரதி புதுச்சேரியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில் அவரை கைது செய்ய போலீசார் விரைந்துள்ளனர். இந்த சம்பவம் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
