NDA கூட்டணியில் 3 சீட்… டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த காரணம்… ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி…!

By Nanthini on தை 4, 2026

Spread the love

தமிழகத்தில் பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைந்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெற முடியும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்திருக்கும் முன்னாள் எம்எல்ஏ பிரபாகர் என்னை விட்டுச் சென்று பல வருடங்கள் ஆனாலும் என்னுடன் தொடர்பில் தான் உள்ளார். எந்த நோக்கத்திற்காக அதிமுகவை எம்ஜிஆர் உருவாக்கினாரோ அது நிறைவேற வேண்டுமென்றால் கட்சியில் பிரித்து கிடக்கும் சக்திகள் அனைத்தும் ஒன்றிணை வேண்டும். அப்படி ஒன்று சேர்ந்தால் மட்டுமே வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியும்.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் தொண்டர்கள் அனைவருடைய விருப்பம். அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்திற்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை கிடையாது. நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைத்ததால் டெல்லி சென்று தமிழக அரசியல் நிலவரம் பற்றி தெரிவித்தேன். அதிமுக பொதுச்செயலாளர் பதவி தொடர்பாக எங்கள் சட்ட போராட்டம் தொடரும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.