அமன்குமார் என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, மேகாலயாவின் சர்வதேச எல்லை வழியாக வங்கதேச ஊடுருவல்காரர்கள் இந்தியாவுக்குள் எவ்வளவு எளிதாக நுழைகிறார்கள் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. இந்த வீடியோவில், எல்லைப் பாதுகாப்பு வேலி முறையாக இல்லாத பகுதியைப் பயன்படுத்தி நபர்கள் சட்டவிரோதமாக உள்ளே நுழைவது பதிவாகியுள்ளது, இது தேசிய பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை சமூக வலைதளங்களில் ஏற்படுத்தியுள்ளது.
“Indian border is not safe.”🚨⚠️
On Instagram, a boy named Aman, posted a video showing how easily Bangladesi citizens enter India through Meghalaya. Terrible!
Meghalaya has a BJP-alliance govt. Still, the Union govt is failed to stop infiltration. pic.twitter.com/CPPLZ3OpyB
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) January 3, 2026
மேகாலயாவில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி (NPP தலைமையிலான MDA கூட்டணி) நடைபெற்று வரும் நிலையில், எல்லையில் ஊடுருவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தவறிவிட்டதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, எல்லையோர கண்காணிப்பைப் பலப்படுத்தவும், கம்பிவேலி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும் வேண்டும் என்று பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு (HMO) சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
