கொடூரம்..! நதிக்கரையில் கொத்துக்கொத்தாக செத்துக்கிடந்த கிளிகள்… மனிதர்கள் தான் காரணம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!!

By Soundarya on தை 3, 2026

Spread the love

மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் உள்ள நர்மதா நதிக்கரையில், 200-க்கும் மேற்பட்ட கிளிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடக்கத்தில் இந்தப் பறவைகளின் உயிரிழப்பிற்குப் பறவைக் காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என அஞ்சப்பட்டது.

இருப்பினும், உயிரிழந்த கிளிகளின் மாதிரிகளை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவை ‘உணவு நச்சு’ (Food Poisoning) காரணமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மனிதர்கள் வழங்கிய உணவு செரிக்காமல் அல்லது அந்த உணவில் இருந்த நச்சுத்தன்மை காரணமாக இக்கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது போன்ற சூழலில் வனவிலங்குகள் மற்றும் பறவைகளுக்குத் தரம் குறைந்த உணவுகளை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.