வீட்டில் தனியாக இருந்த 18 வயது இளம்பெண்… உள்ளே நுழைந்து கதவை பூட்டிய 50 வயது பக்கத்து வீட்டுக்காரர்… அடுத்து நடந்த பயங்கர அதிர்ச்சி சம்பவம்…!

By Nanthini on தை 3, 2026

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை இளம் பெண் ஒருவர் கோடாரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேசம் மாநிலம் பாண்டா மாவட்டத்தில் தந்தையை இழந்த 18 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய தாயுடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி 1 ஆம் தேதி தாய் வேலைக்கு சென்ற நிலையில் அந்தப் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

மதியம் 3.30 மணி அளவில் பக்கத்து வீட்டுக்காரரான சுக்ராம் பிரஜாபதி (50) என்பவர் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இளம் பெண் தனியாக இருப்பதை அறிந்து கொண்ட அந்த நபர் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளார். அந்தப் பெண் தன்னை தற்காத்துக் கொள்ள அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் சுக்ராம் அந்தப் பெண்ணை தடுத்துள்ளார்.

   

அப்போது வீட்டில் இருந்த கோடாரியை எடுத்த இளம் பெண் தற்காப்புக்காக அவரை வெட்டி கொலை செய்த நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கொலை செய்த பிறகு அந்தப் பெண் ரத்தம் படிந்த கோடாரியுடன் நேரடியாக காவல் நிலையம் சென்று சரண் அடைந்தார். உயிரிழந்த நபரின் மனைவி அழைத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் இளம்பெண் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். தற்போது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது