நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. வெளிநாடுகளுக்கு இந்த படம் சில வாரங்களுக்கு முன்பே சென்சாருக்கு அனுப்பப்பட்டு விட்டது. அதே போல் இந்தியாவிலும் இந்த படத்தை வெளியிட ஏதுவாக சென்சார் போர்டுக்கு இந்த படத்தை படக்குழு அனுப்பியுள்ளது.
படத்தில் ஆபாச காட்சிகள் ஆபாச வசனங்கள் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லாத நிலையில் சண்டை காட்சிகளில் மட்டுமே ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதாக சென்சார் குழு தெரிவித்துள்ளது. மற்றபடி படத்தில் நீக்கப்பட வேண்டிய காட்சிகள் மியூட் செய்ய வேண்டிய வசனங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.
தணிக்கைக்குழு அறிவுறுத்தியபடி குறிப்பிட்ட சண்டை காட்சிகளில் வன்முறை காட்சிகளை குறைத்து விட்டு மீண்டும் சென்சாருக்கு படக்குழு ஜனநாயகன் படத்தை அனுப்பி விட்டது. ஆனால் இதுவரை சென்சார் போர்டில் இருந்து சான்றிதழ் வழங்கப்படவில்லை. அங்கு படக்குழுவுக்கு சரியான பதிலும் கிடைக்கவில்லை.
பலமுறை இதுகுறித்து கேட்டும் சரியான பதில் கிடைக்கவில்லை. ஜனநாயகன் படம் ரிலீஸ்க்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் 8ம் தேதி இரவு அல்லது 9ம் தேதி காலை வரை சான்றிதழ் தராமல் இழுத்தடித்து விடுவார்களா, அரசியல் அழுத்தம் காரணமாகவே இதுபோல சென்சார் குழு அதிகாரிகள் ஜனநாயகன் படத்துக்கு நெருக்கடி தருவதாக ஒரு புகார் எழுந்துள்ளது.
