இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் எப்படியாவது பிரபலமடைந்து விட வேண்டும் என்ற ஆர்வம் பலரிடமும் உள்ளது. அதற்காக எதையும் செய்யலாம் என்ற எண்ணத்திற்கு பலரும் சென்று விடுகிறார்கள். அதற்கு மிகப்பெரிய உதாரணம் சமீபத்தில் நடந்த திருத்தணி தாக்குதல் தான். அதற்கு நேர்மாறாக முற்றிலும் வேடிக்கையாக ஒருவர் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ரயிலில் பயணம் செய்து கொண்டிருக்கும் அந்த வாலிபர் திடீரென்று தனது பையில் இருந்து தக்காளி சாஸ் பாக்கெட்டை எடுக்கின்றார்.
அவர் ஏதோ சிற்றுண்டி சாப்பிட போகிறார் என்று சக பயணிகள் அனைவரும் நினைத்திருந்த சமயத்தில் முழு இஞ்சி எடுத்து அதில் சாஸ் ஊற்றி சாப்பிடுகின்றார். அடுத்ததாக ஒரு டீயை வாங்கியவர் அதில் வாழைப்பழத்தை தொட்டு சாப்பிடுகிறார். அதனைப் போலவே ஒரு பெரிய கத்தரிக்காய் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றை பச்சையாகவே சாப்பிடுகிறார். இதனால் ரயிலில் இருந்த சக பயணிகள் அனைவரும் அவரை வியப்புடன் பார்க்கின்றனர். பலரும் முகம் சுளித்த நிலையில் சமூக வலைத்தளங்களில் வெளியான அவருடைய வீடியோ தற்போது லட்சக்கணக்கான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
