“வேகத்துல எதை ஒட்டுறோம்னே தெரியலையா…?” கரூரில் நடந்த நாதக-வின் ஸ்டிக்கர் போராட்டம்…. போலீஸையே சிரிக்க வைத்த தம்பிகள்…!!

By Devi Ramu on தை 2, 2026

Spread the love

கரூரில் அரசுப் பேருந்துகளில் “தமிழ்நாடு” என்ற ஸ்டிக்கரை ஒட்டும் போராட்டத்தின் போது, நாம் தமிழர் கட்சியினர் செய்த ஒரு செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. மற்ற மாநிலங்களைப் போலவே தமிழக அரசுப் பேருந்துகளிலும் மாநிலத்தின் பெயர் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி, அக்கட்சியினர் பேருந்து நிலையங்களில் ஸ்டிக்கர் ஒட்டி வந்தனர்.

கரூர் பேருந்து நிலையத்தில் இந்தப் போராட்டம் நடந்தபோது, அங்கிருந்த நிர்வாகிகள் அரசுப் பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்றனர். அவர்களைத் தடுத்த காவல்துறை, அங்கிருந்த ஒரு பேருந்தில் ஏற்றி கைது செய்ய முயன்றது.

   

அந்தப் பேருந்திற்குள் சென்ற ஒரு நிர்வாகி, ஆவேசத்தில் அந்த வாகனத்திலும் “தமிழ்நாடு” ஸ்டிக்கரை ஒட்டத் தொடங்கினார். இதைப் பார்த்த காவல்துறை அதிகாரிகள், “தம்பி, இது தனியார் பேருந்துப்பா” என்று கூறி விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி தற்போது செம வைரலாகி வருகிறது.