இனி சிக்னல் இல்லாவிட்டாலும் பேசலாம்… புதிய வசதியை அறிமுகம் செய்த BSNL…!!

By Soundarya on தை 2, 2026

Spread the love

இந்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல் , 2026-ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு நாடு முழுவதும் ‘வாய்ஸ் ஓவர் வைஃபை’ சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மேம்பட்ட வசதி இந்தியாவின் அனைத்துத் தொலைத்தொடர்பு வட்டங்களிலும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் கூடுதல் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை. பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனின் ‘செட்டிங்ஸ்’ பகுதிக்குச் சென்று, ‘வைஃபை காலிங்’  விருப்பத்தை இயக்குவதன் மூலம், மொபைல் சிக்னல் குறைவாக உள்ள இடங்களிலும் வைஃபை இணைப்பு வழியாகத் தடையற்ற அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.