கருக்கலைப்பு செய்ய கணவனின் அனுமதி தேவையில்லை… நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!

By Soundarya on தை 2, 2026

Spread the love

கருக்கலைப்பு விவகாரத்தில் பெண்களின் உரிமையை நிலைநாட்டும் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. ஒரு பெண் தனது கருவைக் கலைக்க விரும்பினால், அதற்கு அவருடைய விருப்பமும் சம்மதமும் மட்டுமே போதுமானது என்றும், இதில் கணவனின் சம்மதம் சட்டப்படி தேவையில்லை என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கருக்கலைப்பு செய்வது தொடர்பான முடிவை எடுக்கும் முழு அதிகாரம் அந்தப் பெண்ணிற்கே உண்டு என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி செய்துள்ளது.

பெண்களின் உடல் சார்ந்த உரிமைகள் மற்றும் தன்னாட்சியைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த அதிரடித் தீர்ப்பு அமைந்துள்ளது. மருத்துவ ரீதியாகக் கருக்கலைப்பு செய்வதற்கு மனைவியின் முடிவே இறுதியானது என்றும், அதில் கணவன் தலையிடவோ அல்லது தடை விதிக்கவோ முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள இந்தத் தீர்ப்பு, பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு வழங்கப்பட்ட பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.