அடுத்த பரபரப்பு… சற்றுமுன் முதல்வர் ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த காங்கிரஸ்… திமுக கூட்டணியில் விரிசல்…!

By Nanthini on தை 2, 2026

Spread the love

மதிமுக தலைவர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கின்றார். இதில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் நிலையில் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. ஏற்கனவே அரசின் கடன் விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே புகைச்சல் உண்டாகியுள்ள நிலையில் இந்த விவகாரம் தற்போது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பயண அழைப்பிதழில் பிரபாகரன் போட்டோ இடம் பெற்றதாலயே காங்கிரஸ் இதில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் சமீப காலமாகவே ஆட்சியில் பங்கு மற்றும் கூடுதல் தொகுதி என ஸ்டாலினுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. இவ்வாறான நிலையில் தற்போது சமத்துவ நடைப்பயணத்தை புறக்கணித்துள்ளது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.