“இவளை கொன்னுடுவேன்” ஷாப்பிங் மாலில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய நபர்.. நடந்தது என்ன..? பதறவைக்கும் வீடியோ…!!

By Soundarya on தை 2, 2026

Spread the love
உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோரில் உள்ள பரபரப்பான சந்தைப் பகுதியில், பெண் ஒருவரைக் கத்தி முனையில் பிணைக் கைதியாகப் பிடித்து மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நஜிபாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணா டாக்கீஸ் அருகே உள்ள துணிக்கடையில், புதன்கிழமை இரவு 7:30 மணியளவில் பெண்கள் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென உள்ளே புகுந்த நபர் ஒருவர், அங்கிருந்த இளம்பெண் ஒருவரைப் பின்னால் இருந்து பிடித்து, அவரது கழுத்தில் கத்தியை வைத்து ரூ.1 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனால் அப்பகுதியே போர்க்களமாகக் காட்சியளித்தது.

<

/div>

தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்றம் சாட்டப்பட்டவருடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றனர். சிறிது நேர முயற்சிக்குப் பிறகு, இரவு 8 மணியளவில் போலீசார் அந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதனால் பிணைக் கைதியாகப் பிடிக்கப்பட்ட பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.