விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போது 13வது வாரத்தில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்குகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் 5வது டாஸ்க்கில் பார்வதி வெற்றி பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக திவ்யா 2வது இடத்தில் வெற்றி பெற்றார். இவர்கள் இருவரும் இந்த டாஸ்க்கில் முதல் இடத்தை பிடிக்க அதாவது 9 மதிப்பெண்களுக்காக போராடிக் கொண்டிருந்தனர்.தலைக்கு மேலே பெட்டியில் இருந்த மாவை கீழே சிந்த விடாமல் அதை தாங்கி பிடிப்பதுதான் இந்த டாஸ்க்.
இது எளிமையான டாஸ்க் போல தோன்றினாலும் உண்மையில் இது ஒரு கடினமான டாஸ்க் தான். இதற்கிடையே அந்த டாஸ்க் விதிப்படி போட்டியிலிருந்து வெளியேறியவர்கள், போட்டியில் தொடர்ந்து நீடிக்கும் போட்டியாளர்களை ஸ்மைலி பந்துகளை வைத்து அடித்து அவர்களை போட்டியிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கலாம்.
அந்த விதிப்படி கானா வினோத், கம்ருதீன் திவ்யா மற்றும் பார்வதியை ஸ்மைலி பந்துகளால் அடித்துக் கொண்டிருந்தனர். அப்போது பார்வதியும் திவ்யாவும் ஓயாமல் பேசிக் கொண்டே இருந்தனர். எதற்கு கோபப்படுகிறீர்கள் என்று திவ்யாவை கேட்கும் பார்வதி, காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் அதிகமாக வரும் போல என்று கூறுகிறார். அதற்கு திவ்யா, நீங்க கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிடுங்க என்கிறார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கானா வினோத் கடுப்பாகி, கம்ருதீனை பார்த்து, டேய் கொஞ்சம் வாயில அடிங்கடா… அவங்க 2 பேரும் பேசிட்டே இருக்காங்க என்று கோபமாக கூறுகிறார். அந்த வீடியோவை மட்டும் கட் செய்து இணையத்தில் பகிர்ந்து வரும் பிக்பாஸ் ரசிகர்கள், எங்கள் மனதில் என்ன உள்ளதோ அதை அப்படியே கானா வினோத் சொல்லிவிட்டார் என்று பாராட்டி வருகிறார்கள்.
