“புத்தாண்டில் காதலனை வீட்டுக்கு அழைத்த இளம்பெண்”… உல்லாசமாக இருந்துவிட்டு மர்ம உறுப்பை கத்தியால் அறுத்த கொடூரம்… திடுக்கிடும் சம்பவம்…!

By Nanthini on தை 2, 2026

Spread the love

மும்பையின் கிழக்கு சாண்டா குரூஸ் பகுதியில் புத்தாண்டு தினத்தன்று 25 வயதான இளம் பெண் ஒருவர் தன்னுடைய காதலனை அழைத்து பிறகு கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட 42 வயது நபரும் 25 வயது பெண்ணும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளன. அந்தப் பெண் நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளுமாறு காதலனை வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் ஒவ்வொரு முறையும் அந்த நபர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக அந்தப் பெண் தனது வீட்டுக்கு வருமாறு காதலனை அழைத்துள்ளார். அவரும் வீட்டுக்குச் சென்ற நிலையில் இருவரும் தனிமையில் இருந்தபோது மீண்டும் திருமண பேச்சு எழுந்துள்ளது.

அப்போது அவர் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை எடுத்து காதலனின் மர்ம உறுப்பை துண்டித்துள்ளார். படுகாயம் அடைந்த அவர் வலியால் துடித்த நிலையில் அந்த இளம் பெண்ணிடமிருந்து தப்பித்து உடனடியாக தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்தார். அவரது சகோதரர் விரைந்து வந்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட பெண் திருமணமானவர் எனவும் அவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் இருப்பதும் தெரியவந்துள்ள நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.