பீகார் மாநிலம் சப்ராவில் செவிலியர் ஒருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த செவிலியரின் உடல் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தனது மகளுக்கு நீதி கேட்டு அந்தத் தந்தை கண்ணீருடன் மன்றாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது மனதை உலுக்கி வருகிறது. இச்சம்பவம் நடந்து ஏழு நாட்கள் கடந்தும், பீகார் காவல்துறை இதுவரை ஒருவரைக் கூட கைது செய்யவில்லை என்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
This video keeps haunting.. a father’s plea to punish the culprits of his daughter.
A nurse was raped ,murdered and thrown on tracks in Chhapra, Bihar
It’s been 7 days and @bihar_police has not been able to make a single arrest or any progress. What kind of law and order is… pic.twitter.com/gw6rEpy5Km
— With Love Bihar (@WithLoveBihar) January 1, 2026
பாஜக கூட்டணி ஆட்சியில் இருக்கும் பீகாரில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இத்தகைய சம்பவங்கள் நடக்கும்போது காட்டப்படும் ஊடக ஆர்வம், பீகாரில் மௌனமாக இருப்பது ஏன் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்கக் கோரியும் இணையதளங்களில் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.
