தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஏறத்தாழ பெரும்பாலான கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவித்து விட்டன. ஆனால் பாமக மற்றும் தேமுதிக விடுத்த கட்சிகள் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளன. இதனிடையே பிரேமலதா வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இதனிடையே அனைத்து கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன.
ஆனால் கூட்டணி என கூற முடியாது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் என்ற முழு விவரமும் ஜனவரி ஒன்பதாம் தேதி அறிவிக்கப்படும் என கூறியிருந்தார். இதனுடைய வருகின்ற ஜனவரி ஐந்தாம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் இன்று பிரேமலதா அறிவித்துள்ளார். இதுவரை தேமுதிக கூட்டணி குறித்த முடிவை சஸ்பென்சாக வைத்திருக்கும் நிலையில் திமுக அல்லது அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையுமா அல்லது தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் கைகோர்க்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டணி குறித்த முக்கிய முடிவை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
