இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில்… நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட திடீர் வீடியோ – இணையத்தில் வைரல்!

By Elango on மார்கழி 31, 2025

Spread the love

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. இந்நிலையில் பராசக்தி படக்குழு வெளியிட்ட வீடியோ ஒன்றில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, எனக்கு செழியன் என்ற பெயரே ரொம்ப பிடித்திருந்தது. அதை அனைவரும் சே என கூப்பிடும் போது ரொம்பவும் பவர்கஃபுல்லாக இருந்தது.

இவ்வளவு பவர்ஃபுல்லான எமோஷன்கள் கொண்ட கதாபாத்திரமாக செழியன் இருந்தாலும் அதில் என்டர்டெயின்மென்ட் பண்றதுக்கான இடமும் இருந்தது. இந்த படத்துக்காக தான் முதல் முறையாக ஹைவேஸ் பேண்ட் அணிந்தேன். அதுவே சுவாரசியமான தருணமாக இருந்துச்சு. இதுக்கு முன்னாடி பாடல் காட்சியில் கூட நான் அந்த காஸ்டியூம் போட்டது கிடையாது.

   

மாணவர்களும் மாணவ இயக்கங்களும் எவ்வளவு பவர் ஃபுல் என்று சொல்வதுதான் இந்த படத்தோட ஸ்கிரிப்ட். இப்படி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கும்போது ஒரு ஹீரோவா அதை செய்ய நான் ஏன் யோசிக்கணும்? நம்ம மண் மொழி சார்ந்த படம் இது. பராசக்தி முழுமையான கமர்சியல் திரைப்படம். அனைத்து வகையான எமோஷன்ஸ் இந்த படத்தில் இருக்கிறது. இந்த படம் திரையரங்கில் அதிரடியான அனுபவத்தை கொடுக்கும் என்று நடிகர் சிவகார்த்திகேயன் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.