கடுமையான வயிற்றுவலியால் அவதிப்பட்ட இளைஞர்… அறுவைசிகிச்சையில் காத்திருந்த அதிர்ச்சி… இது எப்படி உள்ளே போச்சு..??

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், இளைஞர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஏழு பல் துலக்கும் பிரஷ்கள் மற்றும் இரண்டு இரும்பு கம்பிகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். கடுமையான வயிற்று வலி காரணமாக அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், வயிற்றில் இந்த விசித்திரமான பொருட்கள் இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பொருட்கள் அகற்றப்பட்டன. தற்போது அந்த இளைஞர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மனநலக் கோளாறு அல்லது விசித்திரமான பழக்கவழக்கங்கள் காரணமாக இத்தகைய பொருட்கள் விழுங்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மருத்துவ வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே பதிவாகியிருந்தாலும், ஜெய்ப்பூரில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.