பயங்கர டுவிஸ்ட்..! தவெகவில் இணையும் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர்..? பரபரப்பில் தமிழக அரசியல்..!!

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love

தமிழக அரசியல் களத்தில் தற்போது ஒரு பரபரப்பான தகவல் வெளியாகி வருகிறது. அதிமுகவின் மூத்த முன்னாள் அமைச்சரான செங்கோட்டையன் அண்மையில் தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்ததைத் தொடர்ந்து, பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தவெகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தவெகவில் இணைய உள்ள அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக ஆண்டிப்பட்டி தொகுதியில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் பேசப்படுகிறது.

ஏற்கனவே பொன். ராதாகிருஷ்ணன் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், இந்தத் தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமீபகாலமாக பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் கட்சித் தலைமை மீது மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. குமரி மாவட்ட அரசியலில் நீண்ட கால அனுபவம் கொண்ட இவர், சட்டமன்றத் தேர்தல் மூலம் மீண்டும் மக்கள் பிரதிநிதியாகத் திட்டமிட்டு வரும் சூழலில், கட்சி மேலிடம் அவருக்கு வாய்ப்பளிக்குமா?  அல்லது தவெகவில் இணைவாரா? என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

இவர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி அல்லது நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். 1999 மற்றும் 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராகப் பணியாற்றிய இவர், கடந்த சில தேர்தல்களில் தொடர் தோல்விகளைச் சந்தித்த போதிலும் குமரி மாவட்டத்தில் கட்சியின் செல்வாக்குமிக்க தலைவராக விளங்குகிறார். தற்போது தமிழக பாஜக சார்பில் டெல்லி மேலிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.