ஆண்டிபயாடிக் மாத்திரைகளை வாங்கும் போது, மருந்தின் அட்டையின் பின்புறம் சிவப்புப் பட்டை (Red Line) இருப்பதை பொதுமக்கள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி இத்தகைய மருந்துகளை உட்கொள்வதைத் தவிர்க்கவே இந்தச் சிவப்பு பட்டை அடையாளம் பயன்படுத்தப்படுகிறது. முறையான ஆலோசனையின்றி ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுப்பது உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், போலி மருந்துகள் புழக்கத்தைத் தடுக்க மருந்தகங்களில் பிரத்யேக QR கோடு ஒட்டப்பட்டுள்ளது. மருந்தின் தரம் குறித்தோ அல்லது போலி மருந்துகள் குறித்தோ சந்தேகம் இருந்தால், அந்த QR கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் பொதுமக்கள் தங்களின் புகார்களை நேரடியாகத் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு தமிழக அரசின் சுகாதாரத் துறையை தொடர்பு கொள்ளலாம்.
