உஷார்..! இன்று நள்ளிரவுக்குள் முடிக்கவிட்டால் ரூ.5000 வரை அபராதம்.. திருத்தப்பட்ட ITR தாக்கல் செய்ய கடைசிநாள்…!!

By Soundarya on மார்கழி 31, 2025

Spread the love

2024-25 நிதியாண்டிற்கான திருத்தப்பட்ட வருமான வரி கணக்கை (Revised ITR) தாக்கல் செய்ய இன்று, கடைசி நாளாகும். ஏற்கனவே தாக்கல் செய்த வருமான வரி கணக்கில் ஏதேனும் பிழைகள் அல்லது விடுபட்ட தகவல்கள் இருந்தால், அபராதத்தைத் தவிர்க்க இன்று நள்ளிரவுக்குள் திருத்தப்பட்ட படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.

காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்யத் தவறினால், வருமானத்தைப் பொறுத்து ₹1,000 முதல் ₹5,000 வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனிடையே, இணையதளத்தில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் போன்ற காரணங்களைக் குறிப்பிட்டு, இந்த காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன.