ஜெயிலில் உருவான ‘மாஸ்டர் பிளான்’…! 110 பவுன் தங்கத்தை பங்கு போட்ட உல்லாச கும்பல்…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on மார்கழி 30, 2025

Spread the love

ராமநாதபுரம் அருகே உள்ள அம்மாபட்டினம் கிராமத்தில், கனகராஜ் என்பவரது வீட்டை ஒரு வாரம் நோட்டமிட்டு 110 பவுன் தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த திருட்டு திட்டத்திற்கு மூளையாக செயல்பட்ட தேனி கணேசன் மற்றும் அவரது கூட்டாளி யுகேந்திர பிரசாத் ஆகியோருக்கு கோவை சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் ஜாமீனில் வெளிவந்தவுடன், திட்டமிட்டபடி பூட்டியிருந்த கனகராஜின் வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த நகைகளை அள்ளிச் சென்றுள்ளனர். கொள்ளையடித்த நகைகளை தேனி மாவட்டத்திற்கு கொண்டு சென்று, காசிமாயன் என்பவர் மூலம் பணமாக மாற்றியுள்ளனர். சில நகைகளை வங்கிகளில் அடகு வைத்துப் பெற்ற பணத்தை மூன்று பேரும் பிரித்துக் கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

   

தனிப்படை போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தேனி மற்றும் திருப்பூர் பகுதிகளில் மறைந்திருந்த மூவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். சிறையில் கைகோர்த்து ஊர் ஊராகச் சென்று கைவரிசை காட்டிய இந்தக் கும்பலின் பின்னணி குறித்து ராமநாதபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.