கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வீட்டில் கீழே தவறி விழுந்த நல்லகண்ணுவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சுமார் ஒன்றை மாதம் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். CPI மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள நல்லக்கண்ணுவை சந்திக்க யாரும் நேரில் வர வேண்டாம் என சிபிஐ வீரபாண்டியன் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்த அவருக்கு கடந்த 28ஆம் தேதி திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவர் தீவிர சிகிச்சையில் இருப்பதால் யாரும் வந்து பார்க்க கூடாது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
