புத்தாண்டுக்கு முன்னாடியே அடித்த லக்…! லாட்டரியில் முதல் பரிசை வென்ற இடுக்கி நபர்…. எவ்வளவு தெரியுமா…??

By Devi Ramu on மார்கழி 30, 2025

Spread the love

கேரளாவில் நேற்று நடைபெற்ற ‘பாக்யதாரா BT 35’ லாட்டரி குலுக்கலில், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முதல் பரிசான 1 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. அதிர்ஷ்டம் தேடி வந்த அந்த டிக்கெட் எண் ‘BH 559235’ ஆகும். இதனை இடுக்கியைச் சேர்ந்த ஏஜென்ட் ஷாஜி என்பவர் விற்பனை செய்துள்ளார்.

அதேபோல், இரண்டாம் பரிசான 25 லட்சம் ரூபாய் கோழிக்கோட்டில் விற்பனை செய்யப்பட்ட டிக்கெட்டிற்கு கிடைத்துள்ளது. மூன்றாம் பரிசாக 5 லட்சம் ரூபாய் கட்டப்பனை பகுதியில் விற்கப்பட்ட டிக்கெட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

   

குலுக்கல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, இடுக்கி மற்றும் கோழிக்கோடு பகுதிகளில் லாட்டரி வாங்கியவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் எண்களைச் சரிபார்த்து வருகின்றனர். முதல் மூன்று பரிசுகள் தவிர, ஆயிரக்கணக்கானோருக்கு ஆறுதல் பரிசுகளும், 100 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலான இதர பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

   

வெற்றி பெற்றவர்கள் தங்களது டிக்கெட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்த்து, உரிய காலத்திற்குள் பரிசைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஒரே நாளில் சாதாரண மனிதர் ஒருவரைப் பணக்காரராக்கிய இந்த லாட்டரி குலுக்கல் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.