ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் மீனவர்களின் படகையும் பறிமுதல் செய்துள்ளன. கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இலங்கை கடற்படை விசாரணை நடத்தி வருகின்றது. தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
