பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கௌரி சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை நந்தினி பெங்களூரில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொலைக்காட்சி மற்றும் சின்னத்திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கௌரி சீரியலில் துர்கா மற்றும் கனகா என்று இரட்டை வேடங்களில் நடித்து வந்த நந்தினி தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இருந்தார்.
இதனிடையே அவர் திடீரென தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. சென்னையில் சூட்டிங்கை முடித்துவிட்டு பிரேக் காரணமாக அவர் பெங்களூருக்கு சென்றுள்ளார். அங்கு அவர் தங்கி இருந்த அறையில் நேற்று இரவு திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. அவருடைய திடீர் முடிவுக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
