தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக நடிகர் விஜய் களத்தில் இறங்கியுள்ளார். விஜய்க்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடையே பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இணையுமா என்ற கேள்வி அரசியல் அரங்கில் விவாத பொருளாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த கட்சிகள் தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் இணைவதில் சில முக்கிய முட்டுக்கட்டைகள் இருப்பதாக தெரிகிறது. அதாவது தொகுதி பங்கீடு மற்றும் முதல்வர் வேட்பாளர் என்பதில் சிக்கல் நீடிக்கிறது.
பாமக தாராளமான தொகுதிகளை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது. விஜய் தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவதால் அன்புமணி ராமதாசை முன்னிறுத்தும் பாமகவுக்கு இதில் உடன்பாடு இல்லை. இரண்டாவதாக தேமுதிக தன்னுடைய வாக்கு வங்கி சரிந்துள்ள நிலையில் ஒரு நிலையான மற்றும் பெரிய கூட்டணியையே அதாவது திமுக அல்லது அதிமுக கூட்டணியை எதிர்பார்க்கின்றது.
விஜய் ஊழலற்ற அரசியல் மற்றும் பழைய அரசியல் முகங்களுக்கு மாற்றாக தன்னை சித்தரிக்க விரும்புவதால் ஏற்கனவே பல கூட்டணிகளில் அங்கம் வகித்த கட்சிகளை சேர்ப்பது தன்னுடைய பிம்பத்தை பாதிக்கும் என்று விஜய் கருத வாய்ப்புள்ளது. அதேசமயம் பாமக போன்ற கட்சிகள் கொண்டுள்ள சாதிய அடையாளங்கள் விஜயின் சமத்துவ அரசியல் கொள்கைக்கு முரணாக அமையலாம் என்பதால் இது சாத்தியமில்லை. இதனால் ஆரம்ப கட்ட பேச்சு வார்த்தைகள் நடந்தாலும் அதிகாரப்பூர்வ கூட்டணி அமைவதில் சிக்கல்தான் என அரசியல் நோக்கங்கள் கூறுகின்றன.
