அதிகாலையில் கேட்ட பயங்கர சத்தம்… ஓடும் ரயிலில் பற்றி எரிந்த தீ… பரிதாபமாக உயிரிழந்த பெண்… பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

ஜார்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் அனகபள்ளி அருகே இன்று அதிகாலை இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. அதிகாலை 2 மணி அளவில் ரயிலின் பி1 மற்றும் எம்1 ஆகிய இரண்டு ஏசி பெட்டிகளில் திடீரென தீப்பிடித்துள்ளது. தூக்கத்தில் இருந்த பயணிகள் பெட்டிக்குள் புகை மூட்டத்தை கண்டு அலறி அடித்து எழுந்துள்ளனர்.

சுதாகரித்துக் கொண்ட சில பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். ரயில் நின்றதும் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ரயிலில் சிக்கி இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் இந்த விபத்தில் சிக்கி பெண் பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். காயமடைந்த பயணிகள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்துக் குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.