மீண்டும் சிபிஐ விசாரணை… விஜய்க்கு அடுத்த ஷாக்…. தமிழக அரசியலில் புதிய பரபரப்பு…!

By Nanthini on மார்கழி 29, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தயாராகி வருகின்றார். கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரம் விஜய்க்கு மிக பெரிய சிக்கலாக மாறியது. அதன் பிறகு சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொண்ட விஜய் தற்போது மீண்டும் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் பொதுச்செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அவர்கள் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதில் அளிக்க உள்ளன. இதனிடையே விஜயிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு அதற்கான கேள்விகளை சிபிஐ இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் விஜய்க்கு சம்மன் அனுப்பப்பட வாய்ப்புள்ளது.