மலேசியாவில் நடந்த ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் கலந்துக்கொண்டார். அவர் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்து வருகிறார். அந்த விழா மேடையில் பேசிய நடிகர் நாசர் கூறியதாவது, ஒரு விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருந்த என் மகனை நடக்க வைத்தவர் விஜய். அவனும் இந்த விழாவுக்கு வாழ்த்துகளை சொல்லி அனுப்பியிருக்கிறான்.
விஜய்க்கு நான் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டு இருக்கிறேன். ஆனாலும் நான் அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். மேலும் நடிகர் சங்க கட்டட பணிக்காக நாங்கள் பணம் கேட்டபோது 1 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்து உதவினார் என்று விஜயை பாராட்டி நடிகர் நாசர் பேசினார்.
