திடீர் ட்விஸ்ட்… டிடிவி போட்ட கண்டிஷன்… கிரீன் சிக்னல் காட்டிய விஜய்… செம ஷாக்கில் இபிஎஸ்…!

By Nanthini on மார்கழி 28, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. மக்களை சந்தித்து தங்கள் கட்சியை நிலை நிறுத்துவதில் திராவிட கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் அதிமுகவின் வருகையாலும் இபிஎஸ்ஐ முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும் கூறி டிடிவி தினகரன் NDA கூட்டணியில் இருந்து விலகினார். அவரை சமாதானப்படுத்தி மீண்டும் கூட்டணியில் இணைக்க பாஜக முயற்சித்தும் அது நிறைவேறவில்லை.

இபிஎஸ்ஐ தவிர வேறு யார் முதல்வர் வேட்பாளராக இருந்தாலும் கூட்டணியில் இணைவோம் என்று திட்டவட்டமாக கூறி வந்தார். ஆனால் இபிஎஸ் தற்போது வரை முதல்வர் வேட்பாளரில் இருந்து மாற்றப்படாததால் ஆத்திரமடைந்த தினகரன் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஆண்டிப்பட்டி தொகுதியை அமமுகவிற்கு எந்த கட்சியை ஒதுக்குகின்றதோ அந்த கட்சியுடன் கூட்டணி அமைப்போம் இல்லை என்றால் தனித்து நின்று களம் காண்போம் என்ற தினகரன் கூறியுள்ளார்.

   

அதிமுக வாக்குகளை விஜய் குறி வைப்பதாலும் அதில் சில பகுதிகளை தினகரன் தன் கையில் வைத்துள்ளதால் தினகரனின் கோரிக்கைக்கு விஜய் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் ஏற்கனவே ஒருமுறை தினகரன் வெற்றி பெற்றதால் அந்த தொகுதியை அவருக்கு ஒதுக்குவதன் மூலம் தமிழக வெற்றி கழகம் அங்கு சுலபமாக நிலை பெற முடியும் என்று விஜய் கருதுகிறார். இதனால் தமிழக வெற்றிக்கழகம் – அமமுக கூட்டணி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது