தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் ஒரு பக்கம் மும்முறமாக நடந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக அதிமுக மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இபிஎஸ் அதற்காக பல வியூகங்களை வகுத்து வருகின்றார்.
இந்நிலையில் கேசி பழனிச்சாமி அதிமுகவில் இணையலாம் என பேசப்பட்ட நிலையில் அது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். அதிமுக தன்னிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று கூறிய அவர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் முதல்வராக வேண்டும் என இபிஎஸ்ஸுக்கு எண்ணம் இருந்தால் தற்போது தனித்தனியாக பிரிந்தவர்களை இணைத்து அதிமுக மேடையில் நிறுத்தலாம் எனவும் தனது மனதில் இருப்பதை போட்டு உடைத்துள்ளார்.
