பொங்கல் பண்டிகைக்கு தரப்படும் இலவச ஆடைக்கு பதிலாக அவரவர் வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இலவச ஆடைக்கு பதில் நேரடியாக ரேஷன் அட்டைதாரர்களின் வங்கிக் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச ஆடை வழங்கல் திட்டம் இனி இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது.
புதுச்சேரி ரேஷன் கடைகளில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு இருபது கிலோ அரிசியில் மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசியில் வழங்கப்படுகின்றது. இதனிடையே சட்டசபையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இரண்டு கிலோ இலவச கோதுமை வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார். சட்டமன்றத்தில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அரசு செயல்படுத்தி வருகின்றது. ஜனவரி 3ஆம் தேதி முதல் 750 ரூபாய் மதிப்புள்ள பொங்கல் தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
