மத்திய அரசின் இந்திய அஞ்சல் துறை, 2026-ஆம் ஆண்டிற்கான கிராம அஞ்சல் பணியாளர் (GDS) உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான மெகா வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சுமார் 30,000 காலியிடங்களை நிரப்பத் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஆட்சேர்ப்பில், கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் அஞ்சல் உதவியாளர் போன்ற பணிகளுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜனவரி 15-ஆம் தேதி வெளியாக உள்ளது. 18 முதல் 40 வயதுக்குட்பட்ட, 10-ஆம் வகுப்பில் ஆங்கிலம் மற்றும் கணித பாடங்களில் தேர்ச்சி பெற்ற எவர் வேண்டுமானாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
எந்தவிதமான எழுத்துத் தேர்வும் இன்றி, பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தகுதியானவர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவது இந்த வேலைவாய்ப்பின் சிறப்பம்சமாகும். விண்ணப்பிப்பவர்களுக்கு உள்ளூர் மொழி தெரிந்திருக்க வேண்டியதுடன், மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பதும் அவசியமாகும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்ற பிரிவினருக்குக் கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றவர்கள் 100 ரூபாய் செலுத்தி இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பகுதி நேர வேலையாகக் கருதப்படும் இப்பணியில் சேருபவர்கள், தங்களின் 65 வயது வரை பணியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
