பெரும் பரபரப்பு..! தடையை மீறியதால்… மலேசியாவில் சர்ச்சையில் சிக்கிய விஜய்…!!

By Soundarya on மார்கழி 27, 2025

Spread the love

மலேசியாவில் இன்று நடைபெறும் நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர் ஒருவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியைக் காட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழாவிற்கு மலேசிய அரசு மற்றும் காவல்துறை (PDRM) ஏற்கனவே கடும் நிபந்தனைகளை விதித்திருந்தது. இது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அரசியல் பேச்சுக்கள், கட்சிச் சின்னங்கள், கொடிகள் அல்லது கட்சி தொடர்பான உடைகளுக்கு (சிவப்பு மற்றும் மஞ்சள் நிறக் கட்சி அடையாளங்கள்) முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தடையையும் மீறி, அரங்கில் ரசிகர் ஒருவர் தவெக கொடியைக் காட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் (Social Media) வைரலாகி வருகிறது. மலேசிய காவல்துறையின் எச்சரிக்கையை மீறி ரசிகர் செய்த இந்தச் செயல், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் விஜய்க்குச் சட்ட ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தலாம் எனக் கருதப்படுகிறது.